தன்னை இழக்கும் கலையே ஆன்மிகம். வேறு எதுவும் அல்ல!!!
--------------------------------
ஆன்மிகம் என்றால் காற்றில் பறப்பதோ, நீரில் மிதப்பதோ அல்ல. நீங்கள் இல்லாமல் போவது. ஆம் உங்கள் இல்லாத ஜீவத்துவத்தின் கொலைக்களமே ஆன்மிகம்.
--------------------------------
ஆன்மிகம் என்றால் காற்றில் பறப்பதோ, நீரில் மிதப்பதோ அல்ல. நீங்கள் இல்லாமல் போவது. ஆம் உங்கள் இல்லாத ஜீவத்துவத்தின் கொலைக்களமே ஆன்மிகம்.
ஆன்மிகம் எதனையும் உங்களுக்கத் தராது. மாறாக எதையெல்லாம் நீங்கள் உங்களுடையது என்று தவறாக கற்பனை செய்து வைத்துள்ளீரோ, அவைகள் எதுவுமே உங்களுடையது அல்ல என்னும் அதிர்ச்சியான உண்மையை கூறும் தயவுதாட்சண்யம் ஆற்ற ஞாயஸ்தானமே ஆன்மிகம்.
ஆன்மிகம் துன்பங்களை எதிர்கொள்ள துணிவில்லாமல் ஓடும் முதுகெலும்பு அற்ற கோழைகளுக்கு அல்ல. மரணம் என்றால் என்ன என்று தீரத்துடன் ஆராய்ந்து, மரணத்தையே ஜெயிக்கக்கூடிய திடம் படைத்த மனோ வீரர்களுக்கானது தான் ஆன்மிகம்.
தன் தலை வலியையும், வாயிற்று வலியையுமே பொருதுக்கொள்ள முடியாமல் அதற்கு தீர்வு தேடி ஜோல்சியரையும், பரிகாரங்களையும், தெய்வத்தையும் தேடி ஓடும் திறமை அற்றவருக்கு அல்ல ஆன்மிகம்.
அகண்ட, பரிபூரண, இரண்டுகள் அற்ற, எங்கும் நிறைந்துள்ள பிரம்மத்தின் சுய வடிவை உணர்ந்து, கற்பனையான தன் ஜீவத்தோற்றத்தை, பிரம்மத்தில் இரண்டற கரையச்செய்து, தங்கள் மாயஜீவத்தோற்றத்தை கொலை செய்யும் துணிவுகொண்ட தீரர்களுக்கே ஆன்மிகம்.

இப்பிரபஞ்சத்தில் எதுவுமே தனித்தனியாக இல்லை. அனைத்துமே. ஒன்றினைக்கப்பட்டே உள்ளது. பூமியோ,ஆகாயமோ,காற்றோ,உஷ்ணமோ,..... எதோ ஒன்றன்மூலம் அனைத்துமே ஒன்றினைப்பட்டே உள்ளன. ஒரு கோளும் மற்றொரு கோளும் அவைகளுக்கிடையில் உள்ள ஆகாயத்தால் இணைக்கப்படுள்ளன. ஒருமரமும் மற்றொரு மரமும் பூமியால், காற்றால் இணைக்கப்படுள்ளன. அவ்வாறே இப்பிரபஞ்சம் முழுவதும் இணக்கப்பட்டு இரண்டுகள் அற்று உள்ளது. எவ்வாறு நம் உடலில் பல அனந்த கோடி உயிரணுக்கள் ஒன்று கூடுவதால் ஒரே தேகம் உருவாகிறதோ, அவ்வாறே அனந்தகோடி பொருட்கள் ஒருங்கிணைந்து ஒன்றானதே பிரபஞ்சம் அல்லது ப்ரஹ்மம் ஆகும். இங்கு எதற்கும் தனித்த இயக்கமோ, செயல்பாடோ கிடையாது. இதில் உலகமும், ஜீவனும் பொய்யாகும். இந்த உண்மையை உணரும் தயிரியம் உள்ளவருக்கே ஆன்மிகம். ஒன்றேயான பிரபஞ்சத்தில் இரண்டாவதாக ஒரு உலகத்திற்கோ, தனித்துவம் படைத்த ஜாவனுக்கோ இடமே இல்லை. உங்கள் ஜீவத்தோற்றம் உங்கள் கற்பனையே!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக