சித்தர் சொன்ன வாலை இரகசியம்




பூரண ஆயுள் என்பது 120 ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ்வது.

* ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகளைக் குறிக்கும்.

* மனித முகத்தில் 14 எலும்புகள் உள்ளன.

* மனித மூளையில் 6 கிராம் அளவிற்கு தாமிரம் உள்ளது.

* ஒரு மனிதனின் உடலிலுள்ள நரம்புகளின் மொத்த நீளம் சுமார் 72 மீட்டர்.

* நமது ரத்தம் ஒரு நாளில் 30 கோடி கி.மீ பயணம் செய்கிறது.

* நுரையீரல் ஒரு நாளைக்கு 23,040 முறை சுவாசத்தை உள்ளெடுத்து வெளியே செலுத்துகிறது.

* நமது இதயம் ஒரு நாளில் 1,03,689 முறை துடிக்கிறது.

* மனிதனின் நாக்கில் உள்ள சுவை அறியும் செல்களின் எண்ணிக்கை மூன்று ஆயிரம்.

* உடலில் உள்ள மின்சாரத்தின் அளவு 25 வாட்.

* ஒரு சராசரி மனிதனின் உடலில் ஓடும் ரத்தத்தின் அளவு 5 லிட்டர்.

* கைரேகையைப்போலவே நாக்கில் உள்ள வரிகளும் ஒவ்வொருவருக்கும் வேறுபடும்.

* மனித உடலில் சதை அழுத்தம் அதிகம் உள்ள பகுதி நாக்கு.

* கண் தானத்தில் கறுப்பு விழிகள் மட்டுமே அடுத்தவருக்கு பொருத்தப்படுகின்றன.

* 900 பென்சில்களை தயாரிக்கும் அளவிற்கு மனித உடலில் கார்பன் சத்து இருக்கிறது.

* மனித உடலில் மிகவும் பலமான பகுதி விரல் நகங்களே. அதில் கெராடின் சத்து உள்ளது, இது காண்டாமிருகத்தின் கொம்புகளில் காணப்படுவதாகும். மரணத்திற்கு பிறகும் கூட நகம் ஒன்றுமே ஆகாது...........

சித்தர்கள் போற்றும் வாலை

வாயு மனமுங் கடந்த மனோன்மணி

பேயுங் கணமும் பெரிதுடைப் பெண்பிள்ளை

ஆயும் அறிவும் கடந்த அரனுக்குத்

தாயும் மகளும்நல் தாரமு மாமே

- திருமந்திரம்

மனதை உன் மணியில் வைத்தால்! மனோன்மணித்தாய் கண்ணில் உள்ளாள்

காட்சி கிடைக்கும்! மணம் அங்கே நிறுத்தி கண்மணியில் நிறுத்தி தவம்

செய்யும்போது அங்குள்ள ஒளி வாயுவால் பெரிதாகும்! கண்மணி சுழல சுழல

காற்று வேகமாகி ஒளியை பேருக்கும்! “மன்மணம் எங்குண்டு வாயு

அங்குண்டு” இதுவும் ஞானியின் கூற்றே!

அந்த மனோன்மணிதாய்க்கு வாலைக்கு அகில லோக அன்னைக்கு சேவகம்

செய்ய காத்திருக்கும் பேயும் பூதகணங்களும் 2 கோடியாகும்! அவ்வாறு உள்ள

2 கோடி பூதகணங்கள் தான் தாயின் கட்டளையை நிறைவேற்றும் சேவகர்கள்!

மிகப்பெரிய இரகசியம் இது!

சித்தர் சொன்ன இரகசியம்!

ஆய்ந்து அறிந்து அறிய முடியாத மனோவாக்கு காயத்துக்கு அப்பாற்பட்ட அந்த அரணுக்கு இவளே எல்லாமாம்!

ஆதி சக்தியாக படைத்ததால் தாய்!

சிவத்தோடு சக்தியாக ஒளியோடு ஒலியாக இரண்டற கலந்து நிற்பதால் சிவசக்தியாய் துலங்குவதால் மனைவி!

உயிரெல்லாம் சக்தியம் சமல்லவா சிவம் படைத்தாரல்லவா எனவே உயிரை படைத்ததால் உயிராக உள் பாதியாக சக்தி துலங்குவதால் மகளுமாவாள்!

ஆஹா அற்புதம்! எவ்வளவு பெரிய உண்மை இது!

ஒவ்வொரு தெய்வத்திற்கும் அவர்கள் பரிபாலனம் செய்வதற்காக பூதகணங்கள் உள்ளன!

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கணக்கில் உள்ளது!

“நல்லதுக்கும் கெட்டதுக்கும் நாலாயிரம் பேர்” முருகப் பெருமானின் பூதகணங்களின் எண்ணிக்கை நாலாயிரம்!

வீரபாகு முதலானவர்கள்! முருகனின் கணங்கள் தன முதலில் வந்து அடித்து நொறுக்கி நம்மை பக்குவபடுத்தி ஞானபாதைக்கு அழைத்து செல்வர்!

தாயே வாலையே என மகாமாயையைப் பணிந்தால் அரவணைப்பாள்!

மும்மலத்தில் பெரியது மாயை!

எப்படி வேண்டுமானாலும் ஆட்டுவிப்பாள்!

தாயே என்று சரணடைந்தால் மட்டுமே தப்பலாம்!

உலகத்திலுள்ள எல்லா பெண்களையும் தாயாக பார்த்தால் மட்டுமே தப்பலாம்!

அபிராமி பட்டரைப் போல!

அழுதால் அமுதம் தருவாள்!

ஞானசம்பந்தருக்கு தந்தது போல!

பசித்தால் சோறு தருவாள் வள்ளலாருக்கு தந்ததை போல!

இன்னும் சொல்லி கொண்டே போகலாம் அன்னையின் மகிமையை!!

அடியேனையும் சாவிலிருந்து காத்தருளினாள்!

இன்றும் படியளக்கிறாள் அவள் சொன்னது போல!

எம்மை பொறுத்தவரை எல்லாமே தாய்தான்!

வாலை தான்!

கன்னியகுமரி பகவதி அன்னைதான்!

சரணம்! சரணம்! சரணம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக