கண் புரை (Cataract) ஐ குணமாக்கும் எளிய மருந்துகள்!

கண் புரை (Cataract) ஐ குணமாக்கும் எளிய மருந்துகள்!
.

கண்ணில் பூ விழுதல்...
.

நமது கண்ணின் கருவிழியில் வெண்படலம் ஏற்படுவதையே கண்ணில் பூ விழுந்துள்ளது எனக் கூறுவர். பல்வேறு காரணங்களினால் நமது விழித்திரையில் ஒளி ஊடுறும் தன்மை குறைவதே இதற்குக் காரணம். இதைத்தான் ஆங்கிலத்தில் கேட்ராக்ட் (cataract) என்று கூறுவர். நோய், கண்ணில் அடிபடுதல், பரம்பரைக் கூறு மற்றும் வயதின் காரணமாகவும், தொடர்ந்து வெளிச்சத்தையே பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கும் இந்த குறைபாடு உண்டாகும்.

இதனால் விழித்திரையில் கொஞ்சம் கொஞ்சமாய் ஒளி ஊடுறுவும் தன்மை குறைந்து ஒரு கட்டத்தில் முழுமையான பார்வை இழப்பு ஏற்பட்டுவிடும். இதற்கு நவீன அறிவியலில் அறுவை சிகிச்சை மூலமாக புதிய செயற்கை கண் வில்லையை வைப்பதுதான் தீர்வாகக் கூறப் படுகிறது. தமிழில் இதனை கண்ணில் பூ விழுதல், விழிப்புரை , கண்புரை , கண்திமிரம் என்றும் அழைப்பர்.

இந்த குறைபாடு பெரும்பாலும் புரதத்தன்மை இழப்பால் ஏற்படுகிறது. கண்ணில் பூ விழுந்தால் தலைவலியோ கண் சிவப்பாக மாறுவதோ இருக்காது. சிலருக்கு அடிக்கடி கண்களில் நீர் வரலாம். பார்வையின் அளவு மிகவும் குறைந்து காணப்படும். சூரிய ஒளி நேராக கண்களை தாக்குவதும், கண்களுக்கு அதிக வெப்பம் தரக்கூடிய வேலையைச் செய்பவர்களுக்கும் கண்ணில் பூ விழ அதிக வாய்ப்புக்கள் உள்ளன.

நவீன மருத்துவத்தில் இந்தக் கண்ணில் பூ விழுவதை குணமாக்க மருந்து கிடையாது என்பது தான் உண்மை. நேரடியாக அறுவைச் சிகிச்சையின் மூலம் பாதிக்கப் பட்ட விழித்திரையை நீக்கிவிட்டு அந்த இடத்தில் செயற்கை விழித்திரையை பொறுத்துவதன் மூலம் மீண்டும் பார்வையைப் பெறமுடியும்.
.

இன்றைய நாளில் கண்புரையை அகற்றி - அதன் பின் செயற்கை விழித்திரையை பொருத்துவதற்கு பணம் 5000/- இருந்து 50000 /- வரை செலவகிறது.!!!!
செலவு செய்யபடுகிறது !!!!!!!
.

எனினும் நமது முன்னோர்கள் இதற்கான தீர்வை அருளியிருக்கின்றனர் என்பது ஆச்சர்யமான ஒன்று.

தேரையர் தனது நூலான "தேரையர் வைத்திய சாரம்" என்னும் நூலில் கண்ணில் பூ விழுதலை நிவர்த்திக்கும் முறை ஒன்றினை அருளியிருக்கிறார்.
.

பாரடா நற்தேனில் சங்கா லாட்டி
பருங்குன்றி மணியது சோலிரண்டு போதும்
நேரடா மண்டலந்தான் விழியிற் போடு
நில்லரிது நில்லரிது பூவிட்டோடும்
மாரடா திரோதாயி மாய்கை தள்ளு
மகத்தான என்குருவின் முறை தப்பாது
சேரடா இளவென்னீர் சாதங் கொள்ளு
சேராதே புளிப்புகையுந் தள்ளிப் போடே
.

சுத்தமான தேனில், சங்கு கொண்டு உரைத்து ஒரு குன்றியளவு தினம் இரண்டு வேளையாக கண்ணில் போட வேண்டும் என்கிறார். இப்படி தொடர்ச்சியாக நாற்பத்தெட்டு நாட்கள் செய்து வந்தால் கண்ணில் விழுந்துள்ள பூ அகன்று விடுமாம். இதற்கென சில பத்திய முறைகளும் உள்ளன, இந்த கால கட்டத்தில் உடலுறவு தவிர்க்க வேண்டுமாம். மேலும் சாதத்தில் சுடு நீரை விட்டு சாப்பிடச் சொல்கிறார். புளி, புகை போன்றவைகளும் தவிர்க்க வேண்டுமாம்.
.

சுத்தமான தேனை எப்படிக் கண்டுபிடிக்கலாம்?

# ஒன்று : கண்ணாடி டம்ளரில் நிறைய தண்ணீர் எடுத்துக் கொண்டு அதில் ஒரு சொட்டு தேனை விடவும். அது கரையாமல் கலங்காமல் அப்படியே அடியில் சென்று படிந்தால் ஒரிஜினலாம்.

# இரண்டு : எவ்வளவு நாள் இருந்தாலும் எறும்பு மொய்க்காதாம்.

# மூன்று : ஒரு சிறிய துண்டு நியூஸ் பேப்பரை எடுத்து அதன்மேல் இரண்டு சொட்டுத் தேனைவிட்டால் அது பேப்பரின் பின்புறம் ஊறி கசியாமல் இருந்தால் சுத்தமான தேனாம்.

# நான்கு : பார்ப்பதற்கு தூய செந்நிறமாக இல்லாமல் சற்று இளமஞ்சள் நிறத்தில் இருக்கும். சிறிது தொட்டு நக்கினால் தித்திப்பு நாக்கில் நீண்ட நேரம் இருக்காது. கூடவே சுவைத்தபின் மஞ்சள், சிவப்பு என்று எந்தக் கலரும் நாக்கில் ஒட்டியிருக்காது!

# ஐந்து : நல்ல தேனை நாயக்கு வைத்தால் நாய் சாப்பிடாதாம். சர்க்கரைப்பாகாக இருந்தால் மட்டுமே நாய் சாப்பிடுமாம்
.

எளிமையான அதே நேரத்தில் ஆச்சர்யமான தீர்வு தானே.....

எனினும் அந்த காலகட்டத்தில் கிடைத்த பொருட்களைக் கொண்டு தேரையரால் அருளப் பட்ட இம் முறைகளை தற்போதை நவீன அறிவியலோடு இணைத்து ஆராய்ந்து மேம்படுத்தினால் எளிய செலவில்லாத மருத்துவ தீர்வு ஒன்றினை நம்மால் முன் வைக்க முடியும். ஆர்வமுள்ளவர்களும், ஆய்வாளர்களும் இது தொடர்பாய் மேலதிக ஆய்வுகளை மேற்கொண்டால் நன்மை கிடைக்கும்.

இது ஒரு தகவல் பகிர்வு மாத்திரமே, தீர்வு இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டுகிறேன்.
.

கண் புரை (Cataract) குணமாக்கும் மற்றுமொரு எளிய மருந்து!
.

இந்த தகவல் கோரக்கர் அருளிய "ரவிமேகலை" என்னும் நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது.
.

பூவிழுந்த கண்ணுக்குமூலி கேளே
விள்ளுவேன் பூவிழுந்த கண்ணினோர்க்கு
விகற்பமற ஐந்தேழு ஒன்பதுநாள்
சள்ளையறக் கோவைச்சாறு சிரசிலூற்றி
சாரவே தேய்த்துப்பின் காண்கையாரைத்
தெள்ளிதமாய் பெருவிரல்கள் நகத்திலும்
தொல்லையற ஊற்றிடவே பூவும்நீங்கும்
கள்ளமறக் கண்பார்வை தெளிவாய்த் தோன்றும்
.

கோவை சாறு எடுத்து அதனை தலையில் விட்டு நன்கு தேய்த்த பின்னர், கை பெருவிரல் நகங்களில் ஊற்றிட வேண்டுமென்கிறார். இவ்வாறு தொடர்ந்து இருபத்தியோரு நாட்கள் செய்து வந்தால் கண்ணில் விழுந்த பூ அகன்று விடும் என்கிறார்.

கோவை சாறு என்றாலே அந்த இலையினுடைய சாறு தான். 20, 30 தலைகளை பறித்து கல்வத்தில் கொட்டி தனியாக சாறு பிழியாமல், கொட்டிய அந்த தழையோடு எடுத்து தலையில் பிழிந்து தேய்த்து கொண்டு, கை விரலிலும் பிழிந்து கொள்ள வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக