இந்துசமயம் ,இந்துமதம் ,ஹிந்து சனாதன தர்மம்...


தர்மத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த பாரத புண்ணியபூமியின் வாழ்க்கைமுறைக்கு இந்துசமயம் என்று பெயர். உண்மையில் இந்துமதம் என்பது ஒரு தனி மதம் அல்ல. அது ஒரு குறிப்பிட்ட, தனிச்சிறப்புமிக்க வாழ்க்கை முறை ஆகும். இந்துமதம் எனும் பெயர் வெளினாட்டினரால் நமக்கு வைக்கப்பட்ட பெயர் வழக்கம்போல் அப்பெயரே நிலைத்துவிட்டது. நம்மவர்கள் அந்த உயர்ந்த வாழ்க்கை நெறியை தர்மம் என்றே அழைத்தனர்.
நம் முன்னோர்கள் அதை சனாதனதர்மம் என்று அழைத்தனர். அதன் பொருள், அது ஆதியந்தமில்லாதது மனிதனால் தோற்றுவிக்கப்படாத புராதான நெறி என்பதாகும்.
எப்படி இறைவனை, பரம்பொருளை ஒரு வரையறைக்குள் கொண்டுவரமுடியாதோ அதேபோன்று அப்பரம்பொருளை உணரவும், அடையவும் உண்மையாகத் துணைநிற்கும் இந்த தர்மநெறியையும் ஒரு வரையறைக்குள் அடக்க முடியாது.
இதன் கடவுள் கோற்பாட்டை ஆராய்வதற்கு கீழ்காணும் பாடலை ஆதாரமாகக் கொள்ளலாம்.
வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க்
கோனாகி யானெனதென்று அவரவரைக் கூத்தாட்டு
வானாகி, நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே!- மணிவாசகர் திருவாசகம்
கடவுள் எங்கும் நிறைந்தவர், எல்லாம் வல்லவர், அவர் தன்னைப் பல்வேறு நாம ரூபங்களாக வெளிப்படுத்திக்கொள்கின்றார். பல்வேறு நாம ரூபங்களில் வெளிப்படும் ஓர் இறைவனை அதே பல்வேறு நாம ரூபங்களில் வழிபடுவது இயல்பானது சிறப்பானது.
சனாதனதர்மத்தில் வழிபடப்படும் திருக்கோலங்களின் அடிப்படையில் ஆறு சமயங்கள் நிறுவப்பட்டுள்ளன அவை
1) சைவம் – சிவன்
2) காணாபத்யம் – கணபதி
3) கௌமாரம் – முருகன்
4) சாக்தம் – சக்தி
5) வைணவம் – விஷ்ணு
6) சௌரம் – சூரியன்
ஆக இவற்றில் எந்த சமயத்தை எடுத்துக்கொண்டாலும் அது சனாதனதர்மம்தான், எப்படி நமது உடல் உறுப்புகள் அனைத்தும் சேர்ந்து ஒரே மனிதனாக உள்ளோமோ அதைப்போன்றதுதான் இதுவும்.
நமது குழந்தை, ஒளிந்துகொண்டு தலையைமட்டும் காட்டி விளையாடினால் நாம் அதன் பெயரைச்சொல்லி அழைப்போமா அல்லது தலையே வா என்று அழைப்போமா?
மேலும் வர்ணாசிரம நிலை இந்த 6 சமயங்களுக்கும் பொதுவானது, இதை இன்று மற்ற அனைத்துசமயங்களிலும் காணலாம். இங்கு வர்ணம் என்பது வேறு சாதி என்பது வேறு
சைவசமயத்திலும் 1)பிரமச்சரியம், 2)கிரகஸ்தம், 3)வானப்பிரஸ்தம், 4) சந்யாசம். ஆகிய நிலைகளைக் கடைபிடிதோர் இருந்தனர்.
வேறுபடும் சமயமெல்லாம் புகுந்துபார்க்கின்
விளங்குபரம்பொருளேநின் விளையாட்டல்லால்
மாறுபடுங்கருத்தில்லை முடிவின்மோன
வாரிதியினதித்திரள்டோல் வயங்கிற்றம்மா. – தாயுமானவர்
...ஓம் சிவாயநம ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக