அறிவியல் நிரூபிக்கும் அழிவற்ற ஆன்மா!

அறிவியல் நிரூபிக்கும் அழிவற்ற ஆன்மா!

மனிதனின் பிரக்ஞை அவன் மறையும் போது அழிவதில்லை; அது பிரபஞ்ச பிரக்ஞையில் சேர்கிறது; உடல் எடுக்கும்போது அது வந்து இணகிறதுஎன்று க்வாண்டம் கான்ஸியஸ்னெஸ் என்ற புதிய அறிவியல் கொள்கையைக் கண்டுள்ள உலகின் பிரபல விஞ்ஞானி ஸ்டூவர்ட் ஹாமராஃபை ஞான ஆலயம் வாசகர்களுக்காகத் தொடர்பு கொண்டோம். ஞான ஆலயம் வாசகர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து தனது அற்புதக் கொள்கையை விளக்கும் நமது கட்டுரை பற்றி மகிழ்ந்ததோடு அடுத்த மாதம் இந்தியாவில் ஆக்ராவுக்கு வரும் தனது விஜயம் பற்றியும் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். அவருக்கு நன்றி தெரிவித்து ஹிந்து தத்துவத்தோடு ஒத்திருக்கும் அவரது அபூர்வமான அறிவியல் கண்டுபிடிப்புகளை இந்தக் கட்டுரையில் தருகிறோம்.

பிரக்ஞை உடலில் எங்கு உள்ளது
கடவுளின் படைப்பில் கோடிக் கணக்கில் ஆச்சரியகரமான விஷயங்கள் உள்ளன.அவற்றில் மனிதனின் பிரக்ஞையும் ஒன்று.
பிரக்ஞை மனிதனின் உடலில் எங்கு உள்ளது? மூளையிலா, அல்லது வேறு இடத்திலா?

மூளையைத் துளைத்துக் கொண்டு துப்பாக்கிக் குண்டுகள் போன பல நிகழ்வுகளில் அதைத் தாங்கி மனிதனின் மூளை பிரக்ஞையைக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். ஆனால் அதே சமயத்தில் தலை ஒரு சாதாரண மோதலுக்கு உள்ளாகி அதனால் பல நிமிடங்கள் அல்லது பல நாட்கள் கூட பிரக்ஞை இழந்த ஏராளமான சம்பவங்களையும் பார்க்கிறோம். உணர்வு திரும்பாமல் பல மாதங்கள் கோமாவில் இருக்கும் ஒருவரின் உடலில் உயிர் இருக்கிறது. ஆனால் பிரக்ஞை இல்லை!பிரக்ஞை இருந்து ஆனால் உடல் அங்கங்கள் பாரிச வாயுவால் பாதிக்கப்பட்டு பல ஆண்டுகள் இயக்கம் இன்றி இருக்கும் அனேகரையும் பார்க்க முடிகிறது.இந்த பிரக்ஞை தான் எவ்வளவு விசித்திரம்! இதை ஆராயும் இன்றைய முன்னணி விஞ்ஞானிகளுள் ஒருவர் ஸ்டூவர்ட் ஹாமராஃப்

அரிசோனா பல்கலைக் கழகத்தில் உணர்வகற்றலியல் எனப்படும் அனஸ்தீசியாலஜியிலும் உளவியலிலும் பேராசிரியராக இருபத்தைந்து வருடங்களுக்கும் மேலாகப் பணியாற்றி ஓய்வுபெற்று, பின்னர் அங்கேயே சிறப்புப் பேராசிரியராக அவர் பணியாற்றி வருகிறார். 1996ஆம் ஆண்டிலிருந்து அரிசோனா பல்கலைக்கழகத்தின் பிரக்ஞை பற்றிய ஆய்வு மையத்தின் இயக்குநராகவும் இருந்து வருகிறார்.

க்வாண்டம் கான்ஸியஸ்னெஸ்
ஆன்மா இருப்பதை என்னால் நிரூபிக்க முடியும் என்று அவர் கூறியது அறிவியல் உலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பிரிட்டிஷ் இயற்பியல் நிபுணரான ரோஜர் பென்ரோஸுடன் இணைந்து க்வாண்டம் பிரக்ஞை என்ற புதிய கொள்கையை அவர் அறிவியல் உலகின் முன் வைத்துள்ளார்

மூளை செல்களுக்குள் மைக்ரோட்யூபூல் என்ற அமைப்பு உள்ளது. இந்த மைக்ரோட்யூபூலில் ஆன்மா உறைந்திருக்கிறது. செத்துப் பிழைத்தவர்களின் அனுபவங்களை ஆராய்ந்து பார்க்கையில் உயிர் உடலை விட்டு நீங்கும் போது பிரக்ஞையானது இந்த மைக்ரோட்யூபில்லிருந்து நீங்கி பிரபஞ்ச பிரக்ஞையுடன் இணைகிறது.
உயிர் மீண்டும் உடலுடன் இணைகையில் இந்த பிரக்ஞை மைக்ரோட்யூபிலில் வந்து இணைகிறது.

அழியாத ஆன்மா இருப்பதை நிரூபிக்க முடியும்
மூளையை ஒரு பயாலஜிகல் கம்ப்யூட்டராக அதாவது உயிரியல் கணினியாகக் கொண்டு ஆன்மாவை நிரூபித்து விட முடியும் என்கிறார் ஹாமராஃப்.

ஒரு பில்லியன் என்பது நூறு கோடியைக் குறிக்கும் எண். இப்படி நூறு பில்லியன் நியூரான்கள் ஒவ்வொரு மனித மூளையிலும் இருக்கிறது. இந்த நியூரான்கள் அனைத்து தகவலையும் ஏந்திச் செல்லும் திறன் படைத்தவை.இதனுள் இருக்கும் மைக்ரோட்யூபூல் தான் பிரக்ஞைக்கும் ஆன்மாவுக்கும் இருப்பிடம் என்கிறார் ஹாமராஃப்.

இந்த ஆன்மா உடல் நீங்கினாலும் பிரபஞ்ச பிரக்ஞையுடன் இணைந்து விடுவதாலேயே ஆன்மாவுக்கும் மரணம் இல்லை என்று அவர் கூறுகிறார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக